Wednesday, January 25, 2012

பதிமுகம் மரம் வளர்ப்பு


















பதிமுகம் மரம் முட்களுடன் பத்து மீட்டர் உயரம் வளரும் குறு மரம். இதன் குறுக்களவு சுமார் 15.30 செ.மீ. விட்டமாகும். ஒரு வருடத்தில் செடிகள் 3-5 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் இளம் பச்சை நிறமுடைய கூட்டிலைகளாக முதல் வருடத்திலேயே பூக்க ஆரம்பிக்கும்,இதற்கு செம்புறை மன் உகந்தது. இது வறட்சியைத் தாங்கி பல் வேறுபட்ட கால நிலையிலும் வளரும். இது வறண்ட வெப்ப மண்டலம், மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளரும். இந்த மரம் முதிரவடைவதற்கு 8 வருடமாகும். இது விதை வழி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. தெனைக்குஇடையெ  ஊடுபயிராகவும் வளர்க்கலாம்.

பதிமுகம் மரம் இயற்கை சாயம் தயாரிக்கவும், ஆயுர்வேத மருந்து தயாரிக்கவும் கேரள வியாபாரிகள் அதிகம் வாங்குகின்றனர். இந்த மரத்தில் இருந்து இதய நோய் சம்பந்தப்பட்ட மருந்து தயாரிக்கப்படுகிறது. ஏழாண்டுக்கு பிறகு இந்த மரங்கள் அதிகம் பயன்தரக்கூடியது. குறைந்தளவு தண்ணீர் போதும். மரத்தின் கிளைகள், பட்டைகள் ஆகியவை கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

பயன்கள்:
இதன் மரக்கட்டைத் தூளை உபயோகித்து மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப் படுகிறது அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது.

சர்கரை நோய் கட்டுப்படுகிரது, இரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படிகிறது. சிறுநீரகக் கோளாறுகள் சீரடைகிறது. மூலநொய் குணமடைகிறது. கொழுப்பு விகிதம் சமச் சீராகிறது. வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக் கின்றது. சரும நோய்சரியாறது.

பூ, இலைகள், ஒப்பனை அழகு சாதனப் பொருட்களாகிறது. இயற்கையான நிறமேற்றுப் பொருளுக்கான அதி அற்புத உற்பத்திப் பொருளாகிறது 1000 மடங்கு எதிர்கால தேவையை நிவர்தி செய்யும்திறன் மிக்கது. இதன் மையத்தண்டில்அடங்கியுள்ள 'பிரேசிலின்' என்ற சிகப்புச் சாயம் காற்றில்பிராணவாயுவுடன் சேரும் போது 'பிரேசிலியன்' வண்ணமாக மாறுகின்றது.

இச்சாயம் நீர், வெளிச்சம் மற்றும் வெப்பத்தால் பாதிப் படையாத, அறிப் புண்டாக்காத முகப் பூச்சுக்கள் தயாரிப்பில் பயன் படுகிறது. முதிர்ந்த மரத்தின் மையப்பகுதியினின்று பெறப்படும் சாயம் தோல்,பட்டு, பருத்தியிழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சாமான்கள் வீட்டுத்தரை, சிறகு, மருந்துகள் மற்றும் பல்வேறுபட்ட கைவினைப் பொருட்களை வண்ண மூட்டப் பயன் படுத்தப் படுகிறது. பத்தமடை கோரைப் பாய்கள் பதிமுக வண்ணத்தால் சாயமூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பதிமுக சாயம் 'கயா' என்னும்மரச் சாயமுடன் கலக்கும் போது கறுப்பு, ஊதா மற்றும் சிகப்பு வண்ணச் சாயங்கள் உருவாக்கப் பட்டு அவை பனைஒலை, மற்றும் தாழை, கைவினைப் பொருட்களை வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் பயன்படும் 'லூக்கோல்' என்னும் மருந்தில் பதிமுகம் பயன் படுத்தப்படுகின்றது. இது கற்பப்பையினுள் கருவி மூலம் சோதனை செய்யும் போது உதிரம் கொட்டுதல் போன்றவற்றை மட்டுப் படுத்திகிறது. இலைகளினின்று பிரித் தெடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம், போன்றவற்றிக்கு எதிராகப்பயன் படுகின்றது. மிக அதிக அளவில் கரியமில வாயுவை கிரகித்துக் கொள்வதுடன் மிக அதிக அளவில் பிராண வாயுவைவெளிப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை அற்புதமாக பாதுகாக்கிறது. மழை வளத்தைத்தூண்டுகிறது.


வேறுபெயர்கள்: சப்பான் மரம்,. பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா.