Sunday, July 28, 2013

பல்லாவரத்தில் பகல்கொள்ளை -- கொள்ளைலாபம்பெரும் நாற்றுப்பண்ணையாளர்கள்


                             எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, இந்த நாட்டிலேலே....

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள், மலர்செடிகளின்மீதும் மரங்களின் மீதும் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் தாவரங்கள் பற்றிய அறியாமையையும் பயன்படுத்தி காசுபண்ணுது ஒருகூட்டம், வாரம்தோறும் வெள்ளிகிழமை பல்லாவரத்தில் சந்தைகூடுவது வழக்கம் அங்கு பலவிதமான பொருட்களும் கிடைப்பதால் கூடுது மக்கள்கூட்டம், இங்கு பலசெடிகள் விற்பணைநிலையங்களில் மலர்செடிகள் விற்பனையும் அமோகம் விலைவாசியும் அமோகம், மலர் செடிகளின் விலை ரூ 30 ஆரம்பித்து 100, 200 செடிகளுக்கு தக்கவாறு விலை நிர்ணயிக்கபடுகிறது, உதாரணத்திற்கு ஒரு செஞ்சந்தன கன்றின் விலை ரூ300 இங்குதான் பகல்கொள்ளை நடக்கிறது என்று நான்சொல்கிறேன், ஏனென்றால் அருகாமையில் உள்ள உள்ளகரம் மற்றும்  ஊர்பக்கம் ஈஷா நாற்றுப்பண்ணையில்  ஒரு செஞ்சந்தன கன்றின் விலை ரூ 10 மட்டுமே, இங்கோ பலா,நெல்லி, மாதுளை, மகோகனி போன்றகன்றுகளின் விலை ரூ160, கொய்யா முந்திரி நாற்றுகளின் விலை ரூ120, சந்தானம் ரூ250, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிறபகுதிகளில் உள்ள நாற்று பண்ணைகளில் ஒரு கன்றின் விலை ரூ 10 தான் ஈஷாவில் ரூ 7, சந்தனம் ரூ30 லிருந்து ரூ50 தான் இப்படிஇருக்க  பல்லாவரத்தில் மட்டும் ஏன் இந்தவிலை, கடன் அட்டைகளை உரசிவிட்டு பொருள்வாங்கும் மக்கள்தானே என்ற மெத்தனமா?

போதுசனங்களுக்கும் என்னபொருள் வாங்குகிறோம் அதன்  விலைஎன்ன? பொருளின் தரமென்ன! என்பதுபற்றி எல்லாம் கவலை இல்லை எங்கு சென்றாலும் கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கவேண்டும், இதைதான் ஏமாற்றுபவர்கள் மூலதனமாக பயன்படுத்துகிறார்கள்.

மக்களுக்கு நாற்றுப்பண்ணைகள்  பற்றிய தகவலும் தெரிவதில்லை, நாற்று உற்பத்தி பண்ணவும் தெரிவதில்லை, நாம் சாப்பிடும் கொய்யா மாதுளை விதைகளை மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றினாலே ஒருவாரத்தில் கன்றுகள் முளைக்கஆரம்பித்துவிடும் ஒரு பலத்தில் இருந்து 100க்கும் அதிகமான நாற்று கிடைக்கும், முந்திரி, பலா, நெல்லி, மகோகனி என அனைத்தும் இம்முறையில்தான் நாற்று தயாரிக்கபடுகிறது, ஐந்து ரூபாய்க்கு வாங்கும் கொய்யா பழத்தில் 200 நாற்றுகளுக்கு மேல் கிடைக்கும் என்றால் மூன்று மாதம் வளர்ந்த ஒரு கொய்யா செடி ரூ 120 என்றால் 5 ரூபாய் பழத்திலிருந்து லாபம் என்னவென்று பாருங்களேன், மக்களுக்கு தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிகொண்டுதான் இருப்பார்கள்....