கால்நடை வளர்த்தால் தான் விவசாயிகள் நீடித்த வேளாண்மையை எளிதில் செய்யலாம், கால்நடை வளர்ப்பதன் மூலம் வருமானம் கிடைப்பதுமட்டுமல்லாமல் உரச்செலவும் குறையும், ஆம் கால்நடை கழிவுகளை உரமாகபயன்படுத்தலாம் செயற்கை உரங்களை தவிர்க்கலாம், இயற்க்கை உரங்களை பயன்படுத்துவதால் பல்லுயிர் பெருக்கம் நடைபெற்று வேளாண்மை சிறக்கவும். கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்கவேண்டுமென்றால் தீவனமேலாண்மையை அவசியம் அடர்தீவனம் உலர்தீவனம் பசுந்திவனம் என சரிவிகிதத்தில் கொடுக்கவேண்டும், சரி தீவன மரம்வளர்ப்பு பற்றி பார்ப்போம்:
சவுண்டல்(சூபா புல்), அகத்தி, கிளரிசீடியா, செடிமுருங்கை, பூவரசு, வாதநாராயணன் போன்ற மரங்கள் தீவனத்திற்க்காக வளர்க்க உகந்தவை இவை குறுக்கியகாலத்தில் வளரக்கூடியவை மட்டுமல்ல ஒடிக்க ஒடிக்க நன்கு வளரக்கூடியவை இவற்றை வேலிப்பயிராகவும் வறப்புப்பயிராகவும் தனிப்பயிராகவும் வளர்க்கலாம், அகத்தி செடிமுருங்கை மரங்கள் கால்நடைகளுக்கு சத்துக்களை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தருபவை முருங்கை இலைகளை உணவாக கொடுக்கும் பொழுது இனவிருத்தியும் நன்றாக இருக்கும்.