Saturday, September 21, 2013

சமவெளிப் பகுதிலும் மிளகு சாகுபடி செய்யலாம்!

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் அனுபவங்கள் 
(தமிழக விவசாயி உலகம் மாத இதழுக்காக நான் எழுதியது)


பொதுவாக மலைப்பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படும் மிளகை சமவெளிப் பகுதியில் தென்னைக்கு ஊடு பயிராக சாகுபடி செய்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்!

மிளகு வாசனை பொருட்களில் ஒன்று. இது குறைந்த அளவு தண்ணீரில் மலைப்பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோயில், கம்பம், தேனி, குமுளி ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. இதுவரை மலைப் பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்துவந்த மிளகு பயிர் சில வருடங்களாக சமவெளி பகுதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்டு முதல் தரமான மிளகு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. அப்படி மிளகு சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்தான் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் திரு.இராஜகண்ணு அவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு-பட்டிபுஞ்சையை சேர்ந்தவர் இராஜகண்ணு ஆசிரியர் (ஒய்வு ) அவரது தோட்டத்தில் தென்னைக்கு ஊடுபயிராக மிளகு வரப்பு ஓரங்களில் பலவிதமான மரங்கள் என்று பசுமை போர்த்தி உள்ளது அவரது  தோட்டம் , 25 வயதுடைய செஞ்சந்தனம், சந்தனவேங்கை போன்ற மரங்களை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.

ஆசிரியரிடம் மிளகு  சாகுபடி பாடம் கேட்போமா  

நான் விவசாய குடும்பத்தசார்ந்தவன் எங்க பாட்டன் பூட்டன் காலம் தொட்டே விவசாயம் தான் எங்க குழதொளில், நான் படிசிட்டு வாத்தியார் வேலை பார்த்தாலும்  விவசாயத்தையும் பார்த்துகிட்டேன், என்மகனும் பட்டய படிப்பு முடிசிட்டு  விவசாயம் பண்ண உதவியா இருக்கார், இப்போ ஓய்வு பெற்றபின் முழு நேரமும் விவசம் செய்றேன் எங்களுக்கு மொத்தம் 15 ஏக்கர் நிலமிருக்கு  10 ஏக்கர்ல தென்னை இருக்கு  5 ஏக்கர்ல நிலத்துல நெல் உளுந்து நிலக்கடலைன்னு பயிர் செய்வேன், தென்னைக்கு வரப்பு பயிரா மரங்களை 25 வருசதுக்கு முன்னாடி நட்டேன், 1998-ல தென்னைக்கு ஊடுபயிரா 1 ஏக்கர்ல மிளகு போட்டேன் நல்லமகசூல் கிடைச்சுது அதிலிருந்து இன்றுவரை மிளகு சாகுபடி பன்றேன், இப்போ மொத்தம் 3 ஏக்கர்ல மிளகு இருக்கு என்றவர் சாகுபடி நுட்பங்களை விளக்கினார்.

மிளகு செடி நட்டு இரண்டம் வருடத்திலேயே சிலசெடிகள் மகசூல் கொடுத்தாலும் மூன்றம் ஆண்டில்தான் முழுமையான மகசூல் கிடைக்கும். மிளகு செடியை எல்லோரும் தென்னை மரத்தில்தான் படரவிடுவார்கள் நானும் ஆரம்பத்தில் அப்படிதான் செய்தேன் சரியான மகசூல் இல்லை,  தென்னை 25* 25 அடி இடைவெளில் இருக்கு அதனால இரண்டு மரங்களுக்கு நடுவே 7அடிக்கு 7அடி இடைவெளி விட்டு கிலுவை, வாதநாராயணன், நஞ்சுமுருங்கை போன்ற குருவகை மரங்களை நட்டேன் 8அடி உயரத்தில் மரங்களை வெட்டிவிடுவேன் அதில் மிளகு செடியை படரவிட்டுளேன் நன்றாக காய்கிறது மிளகு பறிப்பதும் சுலபம்.

என்கதோட்டதுல கரிமுண்டா(நாட்டுரகம்), பன்னியூர் 1,  பன்னியூர் 2,பன்னியூர் 3 போன்ற ராகங்கள் இருக்கு பஞ்சகவியம் கொடுக்குறதால மிளகும் நல்ல திரட்சியா  இருக்கு , மிளகு சாகுபடில முதல் மகசூலா 60 கிலோ கிடசுது அதைவித்த காசுல ஞாபகதார்தம 12கிரம் மோதிரம் வாங்கி போட்டிருக்கேன். ஆரம்பத்துல வச்சமிளகு 1 ஏக்கர்  செடியில இருந்து சென்ற வருடம் அதிகபட்சம 400 கிலோ கிடசுது. வர்ரவருமானதுல 4 ஒரு பங்கு செலவு போனாலும் மிதமெல்லாம் லாபம்தான் மிளகு, கிலுவை, நஞ்சுமுருங்கை இலைசருகு கொட்டி மக்குரதால தென்னையும் நல்ல காய்கிறது என்று பாடத்தைமுடித்தார்.  

செஞ்சந்தனம் சந்தனவேங்கை மரங்களை விக்குரதுலத்தான் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, செஞ்சந்தனம் மரத்துக்கு வனத்துறையில் மரம் வெட்டுவதற்கான அனுமதி(கட்டிங் ஆடர்) வாங்க முடியல வர்ரவியாபரிங்க எல்லாம் கட்டிங் ஆடர் வாங்கித்தாங்க வாங்கிறோம்முனு சொல்றாங்க ஒருவருடம மரத்தவிக்க போராடிகிட்டு இருக்கேன் முடியல என்று விடைபெரும்போடு கூறினார். 

இராஜகண்ணு ஆசிரியர்
9443005676

Monday, September 16, 2013

உலகத்திலேயே மிகப்பெரிய... தேக்கு மரம் !

உலகத்திலேயே மிகப்பெரிய தேக்கு மரம் என்ற புகழுடன் அறியப்படும் இந்த ‘கன்னிமரம்’ எனப்படும் தேக்கு மரம் நீலம்பூரின் பிரதான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. பாலக்காடு மாவட்டத்துக்குள் வரும் பரம்பிக்குளம் காட்டுயிர் பூங்காவில் இந்த தொன்மையான மரம் அமைந்துள்ளது. நீலம்பூர் நகரத்திலிருந்து 80 கி.மீ தூரத்திலுள்ள இந்த மரத்தை சாலை மார்க்கமாக சென்றடையலாம். இந்திய அரசாங்கம் இந்த மரத்திற்கு ‘மஹாவிருக்ஷ புரஸ்கார்’ எனும் விருதினை அளித்துள்ளது.

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த மரத்தின் அடிப்பாகம் 6.48மீ சுற்றளவைக் கொண்டுள்ளது. 400 வருடங்கள் வயதுடையதாக கருதப்படும் இந்த மரம் நுனி வரை 48.75 மீட்டர் உயரத்துடன் காட்சியளிக்கிறது. அதாவது, ஏறக்குறைய 160 அடி உயரம். அதற்குமேல் இதன் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இப்பிரதேசத்தில் வசிக்கும் பூர்வகுடிகள் மத்தியில் ஒரு முக்கியமான ஆன்மீக அடையாளமாகவே கருதப்படும் இந்த தொன்மையான மரத்தை சுற்றி பல கதைகள் விளங்கிவருகின்றன.

அவற்றில் ஒன்று - இந்த மரத்தை வெட்ட முனைந்தபோது இதிலிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது - என்பதாகும். அதன் பின் இந்த மரத்தை உள்ளூர் மக்கள் ‘கன்னி மரம்’ என்றே அழைக்க ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.


நன்றி: பசுமை விகடன்