Monday, September 16, 2013

உலகத்திலேயே மிகப்பெரிய... தேக்கு மரம் !

உலகத்திலேயே மிகப்பெரிய தேக்கு மரம் என்ற புகழுடன் அறியப்படும் இந்த ‘கன்னிமரம்’ எனப்படும் தேக்கு மரம் நீலம்பூரின் பிரதான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. பாலக்காடு மாவட்டத்துக்குள் வரும் பரம்பிக்குளம் காட்டுயிர் பூங்காவில் இந்த தொன்மையான மரம் அமைந்துள்ளது. நீலம்பூர் நகரத்திலிருந்து 80 கி.மீ தூரத்திலுள்ள இந்த மரத்தை சாலை மார்க்கமாக சென்றடையலாம். இந்திய அரசாங்கம் இந்த மரத்திற்கு ‘மஹாவிருக்ஷ புரஸ்கார்’ எனும் விருதினை அளித்துள்ளது.

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த மரத்தின் அடிப்பாகம் 6.48மீ சுற்றளவைக் கொண்டுள்ளது. 400 வருடங்கள் வயதுடையதாக கருதப்படும் இந்த மரம் நுனி வரை 48.75 மீட்டர் உயரத்துடன் காட்சியளிக்கிறது. அதாவது, ஏறக்குறைய 160 அடி உயரம். அதற்குமேல் இதன் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இப்பிரதேசத்தில் வசிக்கும் பூர்வகுடிகள் மத்தியில் ஒரு முக்கியமான ஆன்மீக அடையாளமாகவே கருதப்படும் இந்த தொன்மையான மரத்தை சுற்றி பல கதைகள் விளங்கிவருகின்றன.

அவற்றில் ஒன்று - இந்த மரத்தை வெட்ட முனைந்தபோது இதிலிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது - என்பதாகும். அதன் பின் இந்த மரத்தை உள்ளூர் மக்கள் ‘கன்னி மரம்’ என்றே அழைக்க ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.


நன்றி: பசுமை விகடன் 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான தகவலுக்கு நன்றி...

myl said...

Kannimara Teak is one of the worlds largest living teak tree found in Parambikulam with amazing

வாசுதேவன் சின்னப்பன் said...

நன்றி நண்பர்களே...

wapstar said...

good post !!