Thursday, October 24, 2013

மரங்களில் படிந்திருக்கும் தங்கம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் யூகலிப்டஸ் மர இலைகளில் தங்கம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

யூகலிப்டஸ் மரத்தின் இலையின் நரம்புகளில் தங்கம் காணப்படுகிறது. இம்மரத்தின் வேர்கள் பூமியில் பல மீட்டர் ஆழம் வரை சென்று நீரை உறிஞ்சிக்கொள்ளும் சக்திபடைத்ததாகும். 

சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரும் யூகலிப்டஸ் மரத்தின் வேர்கள் 40 மீட்டர் வரை பூமிக்கு அடியில் சென்று நீரை தேடும். இம்மரத்தின் வேர்கள் தங்கம் போன்ற உலோகங்கள் புதைந்து கிடக்கும் இடத்தையும் தாண்டி தண்ணீர் தேடிச் செல்லும் தன்மை கொண்டவையாகும். அவ்வாறு தேடும் வேர்கள் பூமிக்கு அடியில் இருக்கும் நீரை உறிஞ்சும்போது அதனுடன் சேர்ந்து அந்த இடங்களில் இருக்கும் தங்கத்தையும் சேர்த்து உறிஞ்சிக்கொள்ளுமாம். 

மேலும் எந்த இடங்களில் பெருமளவில் தங்கம் புதைந்திருக்கும் என்ற தகவலையும் இந்த கண்டுபிடிப்பு தெரிவித்துள்ளது. 

தங்கம் தாவரங்களின் செல்களுக்குள் இருக்கும் தன்மையில்லாததால் நீருடன் உறிஞ்சப்படும் தங்கமானது மரத்தின் உச்சியான இலைகளுக்கு அனுப்பப்படுகிறது என்றும் யூகலிப்டஸ் மர இலையில் மிக மிக சிறிய அளவில்தான் தங்கம் காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி:http://tamil.webdunia.com

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியக்க வைக்கும் செய்தி... நன்றி...

வெட்டாமல் இருக்க வேண்டுமென்பது முக்கியம்...!

Unknown said...

it may be true or wrong..but i welcome this post so as the people will think before cutting trees

Unknown said...

why cant i joint with your team.?
im very intetest with trees.
waiting for reply...
-ferozmd009@gmail.com

Unknown said...

why cant i joint with your team.?
im very intetest with trees.
waiting for reply...
-ferozmd009@gmail.com

வாசுதேவன் சின்னப்பன் said...

மகிழ்ச்சி நண்பரே உங்களை போன்று மரம் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களின் அதரவு மகிழ்ச்சியளிக்கிறது

க. கதிரவன் said...

வணக்கம் நண்பரே. தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் சந்தித்திருக்கிறோம். நினைவிலிருக்கும் என்று எண்ணுகிறேன். நல்ல அறிமுகம். பேருந்தில் ஏறியவுடன் அலைபேசினேன். தாங்கள் எடுக்கவில்லை. இருக்கட்டும் இனி பேசுவோம். 2014இல் பதிவுகள் இல்லை. ஏன்? தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

வணக்கம் நண்பர் வாசுதேவன்.

நான் மணிகண்டன் சென்னைலிருந்து. சினிமா துறையிலிருக்கிருக்கிறேன். வந்தவாசி அருகில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளேன். அதில் காட்டு மரங்கள் வளர்க்க விரும்புகிறேன். தங்களின் தொடர்பு எண் கிடைத்தால் உதவியாக இருக்கும். என்னுடையெ தொடர்பு எண் 9789908441.

நன்றி
மணிகண்டன்.